Categories
சினிமா தமிழ் சினிமா

இன்னும் எத்தனை பேர் அஜித் முதுகுல குத்துவீங்க?…. கிண்டல் செய்யும் ரசிகர்கள்….!!!!!

அஜித் நடிக்கும் “துணிவு” மற்றும் விஜய் நடிக்கும் “வாரிசு” திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இதற்கிடையில் எந்த நடிகருக்கு அதிக தியேட்டர் ஒதுக்கப்படும் என்ற கேள்விகள் எழுந்தது. இதில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ “அஜித் உடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் விஜய் தான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். எனினும் வாரிசு திரைப்படத்திற்கு குறைவான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் நான் சென்னைக்கு சென்று உதயநிதியை சந்தித்து கூடுதல் திரைகள் பற்றி பேசப் போகிறேன்” என அவர் பேசிய வீடியோ வைரலாகியது. இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை முன் வைத்தனர். இந்நிலையில் வாரிசு படத்தை தமிழகத்தில் யார்..யார் வெளியிடுகின்றனர் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

அவற்றில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதிகளில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது என அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகிய உள்ளது. அதனை தொடர்ந்து ரெட் ஜெய்ண்ட் தன் டுவிட்டர் பக்கத்திலும் இதை அதிகாரபூர்வமாக அறிவித்தது. இது தொடர்பாக விஜய், அஜித் ரசிகர்கள் மீண்டுமாக ஒருவரையொருவர் கேலி செய்து வருகின்றனர். சில ரசிகர்கள், “தல அஜித்தை முதுகுல குத்திட்டாங்க. மேலும் எத்தனை பேர் இப்படி முதுகுல குத்துவீங்க. தில் ராஜூ பயந்துவிட்டார் துணிவு பார்த்து” என சமூகவலைதளத்தில்  பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |