நான் ஈ படத்தில் வில்லனாக நடித்த சுதீப் பயல்வான் என்ற படத்தில் நடிகராக நடிக்கின்றார்.
வில்லன் என்றாலே இவர் தான் பா என்று சொல்லும் அளவுக்கு 2012 ஆம் ஆண்டு வெளிவந்த நான் ஈ படத்தில் நடித்திருந்தார் சுதீப் . பின்பு 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த புலி திரைப்படத்தில் வில்லனாக நடித்து பல பாராட்டுகளைப் பெற்றார். வில்லனாகவே நடித்தால் எப்போதுதான் ஹீரோவாக என்று ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பயல்வான் என்ற திரைப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த படத்தை ஸ்போட்ஸ் ஆக்சன் ட்ராமா என்று கூறலாம். ஒரு மல்யுத்த வீரராக நடித்துள்ள சுதீப் தனது கனவை நினைவாக்க மேற்கொள்ளும் பயணத்தையும் அதில் அவர் சந்திக்கும் சவால்களையும் பற்றிய கதையாகும். பல எதிர்பார்ப்புகளுடன் செப்டம்பர் 12ம் தேதி என்று கன்னடா , இந்தி , தமிழ் , தெலுங்கு , மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளிலும் பயில்வானாக வலம் வர உள்ளார் நடிகர் சுதீப்.