தமிழகத்தில் NPR நிறைவேற்றப்பட்டதற்கு தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த தேசிய மக்கள் குடியுரிமை பதிவேட்டில் குறிப்பிட்ட சில விஷயங்களை நீக்க வேண்டும் , இதனால் இஸ்லாமிய மக்கள் அச்சப்படுகின்றனர் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் , மத்திய அரசு எந்த பதிலும் அளிக்காத நிலையில் தமிழகத்தில் NPR பதிவை நிறுத்தியுள்ளதாக அமைச்சர் உதயகுமார் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கூறி இருந்தார்.
இந்நிலையில் இன்று நேரமில்லா நேரத்த்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அமைச்சர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய , தமிழகத்தில் மக்கள் தொகை பதிவேடு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதை சட்ட பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.