மறந்து போன நமது பாரம்பரியம் மிக்க வாழை இலையின் பயன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வாழையிலை என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது விருந்து தான். அது சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி விருந்து என்றால் நிச்சயம் இலையில் தான் சாப்பாடு இருக்கும். இன்றைய காலத்தில் வாழை இலை என்பது மறந்து கொண்டே போகிறது. அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் உணவு உண்கின்றார்கள். ஹோட்டலில் கூட வாழையிலை கிடைப்பதில்லை.
இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் என்றுதான் சொல்லவேண்டும். நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறைக்கு வரும் போதெல்லாம் தட்டிலேயே உணவை அருந்த விருப்பப்படுகிறார்கள். மாறாக நம் இலையில் சாப்பிட்டால் நன்மைகள் அதிகரிக்கும். நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என்று நமக்கு தெரியுமா.
நம் முன்னோர்களின் வாழ்க்கை எத்தனை சிறப்பம்சங்கள் உள்ளன. அவர்கள் எவ்வாறு இவ்வளவு ஆரோக்கியமாக உள்ளார்கள் தெரியுமா? அதற்கு காரணம் பண்டைய கால உணவு பழக்கங்களும், வாழை இலையில் உண்ணுவதும் ஆகும். இதுவே அவர்களை நோயின்றி வாழ்வதற்கு வழிவகுக்கின்றது.
வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்:
சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.
பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
வாழை இலையில் உணவை உட்கொள்வதால் உடலின் தோல் மென்மையும், பளபளப்பும் பெற்று அழகும் ஆரோக்கியமுடனும் தோன்றும். தலை முடியும் கருக்கும்.
எவ்வகைத் தீக்காயமாயினும் குருத்து வாழை இலையை தீகாயத்தில்ன மேல் வைத்துக் கட்டுவதாலும் வாழை இலை அல்லது பூவைக் கசக்கி அதன் சாற்றை மேல் தடவுவதாலும் விரைவில் குணம் தரும்.
வாழைத் தண்டின் சாறு சிறுநீரைப் பெருக்கும். இதில் வெடிப்பின் சத்து சேர்ந்துள்ளதால் நீர்க்கட்டு, நீர் எரிச்சல் குணமாகும்.
சிறுநீர் கற்கள் விரைந்து வெளியேறும்.வாழைக் கிழங்கை இடித்து அதன் சாறை நீக்கி விட்டு திப்பியை அடிபட்ட வீக்கங்களுக்கு இட வீக்கமும் வலியும் குணமாகும்.
இப்படி எண்ணற்ற பலன்களை உடைய வாழையை எவ்வகையிலேனும் அவ்வப்போது பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வு பெற்று ஆயுளைக் கூட்டுங்கள்.