Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இன்று முதல் கிடையாது… மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை… மது பிரியர்களுக்கு அதிர்ச்சி…!!

அரியலூரில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும்  விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடயங்கியதிலிருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில்  இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கொரோனாகட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மீண்டும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அங்கு ஒரே நாளில் 33 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது . இதனால் இன்று அதிகாலை நான்கு மணியில் இருந்து  மறு உத்தரவு வரும் வரை கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் அனைத்து மதுபானம் விற்பனைக் கடைகளும் மூடப்படுவதாக  மாவட்டத்தின் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மதுபானக் கடைகள் மற்றும் அரசு உரிமை பெற்ற தனியார் மதுபான கடைகள் என அனைத்தும் இன்று முதல் மூடப்படுகின்றது என்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |