Categories
தேசிய செய்திகள்

சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் – இம்ரான் கானுக்கு வலியுறுத்தல் …!!

பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானை, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் பெஷாவர் பகுதியில் வசித்து வருபவர் ராதேஷ் சிங் தோனி. கல்சா என்ற அமைதி நீதி அமைப்பின் தலைவராக இவர் இருந்துவருகிறார். இவரின் உயிருக்கு பாகிஸ்தானில் உள்ள சில அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானின் லாகூரை விட்டு தனது குடும்பத்துடன் வெளியேறியுள்ளார். இதுகுறித்து அச்சம் தெரிவித்து பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அமரீந்தர் சிங், பாகிஸ்தானில் சீக்கியத் தலைவர் தோனிக்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்கிறேன். கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் சீக்கியர்கள் தாக்கப்பட்டுவருகின்றனர். ஆகவே அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுகிறேன் என கூறியிருந்தார்.

ராதேஷ் சிங் தோனி கடந்த 2018ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக களம் கண்டார். அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளான அவர் தனது உடைமைகள் மற்றும் சொத்துகள் ஆகியவற்றை பாகிஸ்தானிலேயே விட்டுவிட்டு தனது மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் அந்நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |