Categories
தேசிய செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – மாநில அரசு உத்தரவு!

அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநில அரசுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையை கட்டுப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

அதில் பொருட்களை பதுக்குவோர் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 5,194பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் ஏப்.,14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பணிகளை தவிர மக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளதால் அத்தியாசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநில அரசுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |