Categories
தேசிய செய்திகள்

சிங்கப்பூருக்கு தேவையான மருத்துவ பொருட்கள் விநியோகம் உறுதி செய்யப்படும்: பிரதமர் மோடி..!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங்குடன் தொலைபேசி உரையாடல் நடத்தினார். COVID19 என்ற கொரோனா வைரஸ் தொற்று நோயால் சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் தொடர்பாக எதிர்கொண்ட சவால்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த உரையாடலில், சிங்கப்பூருக்கு மருத்துவ பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை பராமரிக்க அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். அதேபோல, சிங்கப்பூரில் உள்ள இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆதரவுக்கு பிரதமர் தனது பாராட்டுகளையும் தெரிவித்தார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது, சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

இதனால் உலகளவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27.44 லட்சம் (2,744,614) ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை (191,791) 1.91 லட்சமாக ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 55 ஆயிரத்து 443 ஆக அதிகரித்திருப்பது மன நிம்மதியை தருகிறது. கொரோனவால் அதிகம் பாதித்த அமெரிக்காவில் உயிரிழப்புகள் மட்டும் 50,000 தாண்டியது.

சிங்கப்பூரில் இதுவரை 12,075 பேர் கொரோனவள் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர், 924 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல, தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் தான் சிங்கப்பூர் லீ ஹ்சியன் லூங்-ஐ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் உரையாடினார்.

Categories

Tech |