Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோவிலில் நுழைந்து… உண்டியலில் பூட்டை உடைத்து திருடிய… 2 பேரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோவிலில் நுழைந்து உண்டியலின் பூட்டை உடைத்து திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள புதுக்கோட்டை என்ற கிராமத்தில் வீரபத்திரன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த மே 9ஆம் தேதி பூஜை செய்துவிட்டு கோவில் நிர்வாகிகள் கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மே 13ஆம் தேதி நிர்வாகிகள் கோவிலை திறந்து பார்த்த பொழுது உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் உடனடியாக கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்ற இளைஞனும் ஒரு சிறுவனும் இந்த சம்பவத்தை செய்தது போலீசாருக்கு என்பது தெரியவந்தது. இந்நிலையில் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |