விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞன் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள வல்லந்தை பகுதியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தர்சன் சிங்(55) சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் பழதோட்டம் வைத்து விவசாயம் செய்து வருகின்றார். இவரது தோட்டத்தில் மாம்பழம், சப்போட்டா, கொய்யா என பலவகையான மரங்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தர்சன் சிங் தோட்டத்தில் ஒரு இளைஞர் அனுமதியின்றி கொய்யா பழங்களை பறித்துள்ளார்.
இதனை பார்த்த தர்சன்சின் அவரிடம் விசாரித்தபோது அவர் சிலிப்பி கிராமத்தில் வசிக்கும் வெற்றிவேல் முருகன் என்பது தெரியவந்துள்ளது. அதன் பின் விவசாயி அந்த இளைஞனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெற்றிவேல் கத்தியை காட்டி தர்சன் சிங்கை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இது குறித்து விவசாயி மண்டலமாணிக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வெற்றிவேல் முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.