Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பட்டப்பகலில் வீடு புகுந்து… மர்ம நபர் செய்த காரியம்…வலைவீசி தேடி வரும் காவல்துறையினர்…!!

பட்ட பகலில் வீட்டில் நுழைந்து தனியாக இருந்த பெண்ணிடம் இருந்து தங்க தாலியை பறிக்க முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள சத்திரக்குடி தீயனூர் காலனியில் சத்தியேந்திரன் அவரது மனைவி சுபரோஸ் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் காரைக்குடியில் உள்ள தபால் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல சத்தியேந்திரன் வேலைக்கு சென்ற நிலையில் சுபரோஸ் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மர்மநபர் ஒருவர் வீட்டின் பின்புறம் கதவை திறந்து உள்ளே புகுந்துள்ளார்.

இதனையடுத்து அந்த நபர் சுபரோஸ் அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுபரோஸ் கத்தி கூச்சலிட்டு மர்ம நபர் பறித்த சங்கிலியை இழுத்துள்ளார். அதில் பாதி சங்கிலி சுபரோஸிடமும், மறு பாதி அந்த மர்ம நபரிடம் சிக்கியுள்ளது. இதனைதொடர்ந்து அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து சுபரோஸ் சத்திரக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |