அரசு மருத்துவமனையில் பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் மீண்டும் பணி வழங்ககோரி கலெக்டர் அலுவலகத்தில்திரண்டனர் .
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த மே மாதம் முதல் தற்காலிக செவிலியர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வந்தனர். இதனையடுத்து திடீரென்று எந்தவித அறிவிப்பும் இன்றி செவிலியர்கள் பணி நீக்கம் செய்ததால் பணிபுரிந்த அவர்களுக்கு ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை எதுவும் வழங்கப்படவில்லை என்று கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். இந்நிலையில் செவிலியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த அதிகாரிகள் கலெக்டர் வெளியில் சென்று இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் செவிலியர்கள் கலெக்டரை சந்திக்கும் வரை அங்கிருந்து செல்ல மாட்டோம் என்று அலுவலகத்தில் கூடி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் அதிகாரிகளிடம் கொடுத்த மனுவில் “கொரோனா காலத்தில் எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தடுப்பு பணியில் இணைந்து நாங்கள் வேலை பார்த்தோம். எனவே எங்களின் நிலையை கருத்தில் கொண்டு எங்களுக்கு மீண்டும் பணி வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும்” என்று இருந்தது.