Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த மலையில் தாவரவியல் பூங்கா…. 100 ஏக்கர் பரப்பில்…. கலெக்டர் நேரில் சென்று ஆய்வு….!!

ஏலகிரி மலையில் தாவரவியல் பூங்காவினை கொண்டுவருதல் தொடர்பாக கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

திருப்பத்தூரில் உள்ள ஏலகிரிமலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகின்றது. எனவே சுற்றுலாத்தலமாக விளங்கும் ஏலகிரி மலைக்கு விடுமுறை நாட்களில் பயணிகளின் வரத்து அதிகரித்து வருகின்றது. இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக இங்கு கோடை விழா நடத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா அந்த மலையில் 100 ஏக்கரில் தாவரவியல் பூங்காவினை கொண்டுவருதல் தொடர்பாக பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறை போன்ற துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது பூங்கா அமைக்க 100 ஏக்கர் அளவீடு செய்யவும், அதே பகுதியில் உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கும் அளவீடு செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நிலாவூர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக பயன்பாடு இன்றி இருக்கும் படகு துறை மற்றும் பூங்காக்களை மீண்டும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு திட்ட அறிக்கையை தயார் செய்யவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு இங்கு மீண்டும் படகுத்துறை மற்றும் பூங்காக்கள் செயல்பட இருப்பதனால் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் வளம் பெறும் என்று அந்த பகுதியில் இருப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |