Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த மாவட்டத்திற்கு…. 3 ஆயிரம் கோவிஷீல்டு…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 3 ஆயிரம்  கோவிஷீல்டு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைப்பதற்காக முதற்கட்டமாக 45 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கும், அதைத்தொடர்ந்து 2 -ம்  கட்டமாக 18 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கும் ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

ஆனால் குறைவான தடுப்பூசி மருந்துகள் வருகை காரணமாக கடந்த சில நாட்களாக தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் 4 ஆயிரம்  கோவிஷீல்டு தடுப்பூசிகள் மாவட்டத்திற்கு வந்தது. அதில் 3 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் உடனடியாக ஆரம்ப, சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |