இசேவை மையத்தில் பொதுமக்கள் திரண்டு வருவதால் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அவர்களுக்கு தேவையான வாரிசுச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டை பெயர் மாற்றம், செல்போன் எண் இணைப்பு போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக இசேவை மையத்திற்கு செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு தேவையான சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்து கொடுக்கப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் பலர் சேவை மையங்களில் திரண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக இசேவை மையங்கள் பல வாரங்களுக்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கியது. இதனையடுத்து பல்வேறு சான்றிதழ்கள் பெற பெரும்பாலானோர் சேவை மையங்களுக்கு வருகின்றனர். அதன்படி திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் உள்ள சேவை மையத்தில் பெரும்பாலானவர்கள் திரண்டனர். இதனால் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் அவர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, தங்களது பணிகளை செய்ய தாசில்தார் ஜெகநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்பின் பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.