Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இந்த நாளில் வைக்காதீங்க…. அறிவிப்பு பலகை வைத்த உரிமையாளர்கள்… கட்டுப்பாடுகளை பின்பற்ற நடவடிக்கை..!!

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் திருமணம் போன்ற விழாக்களை வேறு தேதிக்கு மாற்றி வைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில் தமிழக அரசு படிப்படியாக ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சில கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் தான் பொதுமக்கள் முகூர்த்தம் பார்த்து    திருமணம், புதுமனைபுகுதல், காதணி விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை  நடத்தி வருகின்றனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் திருமணம், காதணி போன்ற பல்வேறு விழாக்களை வேறு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டும் என்று நெல்லையில் உள்ள திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள்  அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். மேலும் இது குறித்து சுகாதார அதிகாரிகள் தரப்பில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் திருமணம் போன்ற விழாக்களில் மக்கள் கூட்டம் அதிகமாவதை தவிர்த்து எளிமையாக நடத்த வேண்டும் என்றும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

Categories

Tech |