ஜப்பானில் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் குழந்தைகள் தற்கொலைகள் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மிக அதிகமாக இருக்கிறது என்று உள்ளூர் கல்வி அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அதன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடந்த வருடம் பள்ளிகள் அடைக்கப்பட்டது. இதனால் குழந்தைகள் வகுப்பறையை மறக்கும் நிலைக்கு சென்றனர். இதன்காரணமாக தொடக்கநிலை முதல் உயர்நிலைப் பள்ளி வரை 415 குழந்தைகள் தற்கொலை செய்ததாக ஜப்பான் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 100-க்கு மேல் அதிகரித்துள்ளது. இது 1974-ல் குழந்தை தற்கொலைகளை பதிவு செய்ய தொடங்கியதிலிருந்து அதிகமாகும் என ஜப்பானின் 4-வது பெரிய செய்தித்தாளான Asahi-ல் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கொரோனா தொற்றுநோய் காரணமாக பள்ளி மற்றும் வீட்டுச் சூழல்களில் ஏற்படும் மாற்றங்கள் குழந்தைகளின் நடத்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி முடிவுகள் காட்டுகின்றன என்று ஒரு கல்வி அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். அதன்பின் ஜப்பான் அரசாங்கத்தின் ஒரு முயற்சியில் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 40 சதவீதம் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் 2020-ல் கொரோனா தொற்றால் ஏற்படும் உணர்ச்சி மற்றும் நிதி அழுத்தங்களுக்கு மத்தியில் தற்கொலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் ஆண்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது குறைந்தது என தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவமானம் அல்லது அவமதிப்பை தவிர்ப்பதற்கான ஒருவழியாக ஜப்பானில் தற்கொலை ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும் G7 நாடுகளின் குழுவில் அதன் தற்கொலை விகிதம் நீண்டகாலமாக மிக அதிகமாக உள்ளது.