Categories
உலக செய்திகள்

இந்த நாட்டு தடுப்பூசியே வேண்டாம் …. அதிபர் நம்பும் ஓரே தடுப்பூசி …. வெளியான தகவல் ….!!!

பிரிட்டனின் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை  வடகொரியா நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . 

உலக நாடுகள் முழுவதும் கொரோனா  வைரஸ் தொற்றை  கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே தற்போது வரை ஒரு கொரோனா தொற்று கூட பதிவாகவில்லை என்று வடகொரியா கூறிவருகிறது. ஆனால் இதன் உண்மைத் தன்மையை குறித்து ஆய்வாளர்கள் நீண்ட காலமாக கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் தென்கொரிய உணவு நிறுவனத்துடன் தொடர்பில் உள்ள தேசிய பாதுகாப்பு உத்தி (ஐ.என்.எஸ்.எஸ்) நிறுவனம் நன்கொடையாக வழங்கிய அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை  வடகொரியா நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும்  உலகளாவிய தடுப்பூசி விநியோகத் திட்டத்தின் கீழ் கடந்த பிப்ரவரி மாதத்தில் கிட்டத்தட்ட 2 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை  வடகொரியா நாட்டுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் நீண்ட ஆலோசனைகளை தொடர்ந்து  ஏற்றுமதி தாமதமானதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே சீன நாட்டின் தடுப்பூசிகள் பயனுள்ளதாக இல்லை என்றும், வடகொரிய அரசு அதை நிராகரித்து உள்ளதாகவும் ஐ.என்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது. அதேசமயம் ரஷ்ய தடுப்பூசிகளை வடகொரிய அதிபர் நம்புவதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |