டெட்டா வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்கிலாந்து விமானங்கள் ஹாங்காங்கிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது .
இங்கிலாந்து நாட்டின் டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனால் அந்நாட்டில் கடந்த சில நாட்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது .மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் விமானங்கள் ஹாங்காங்கிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது .
இந்த பயணிகள் விமானங்களுக்கான தடை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த டெல்டா வகை கொரோனா வைரசில் இருந்து உருமாற்றமடைந்த L452R என்ற வைரஸ் பாதிப்பு இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்த பயணிகள் மூலமாக ஹாங்காங்கில் பரவியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக இந்தியா, பிலிப்பைன்ஸ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.