2020-ஆம் ஆண்டு இறுதி வரையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆண்களின் சதவிகிதம் அதிகமாக உள்ளது.
துபாயில் கடந்த 2020-ஆம் ஆண்டு இறுதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதுகுறித்து அந்நாட்டு புள்ளியியல் மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறுகையில், துபாயில் வசிக்கும் மொத்த மக்கள் தொகையில் 34, 11,200 பேர் உள்ளனர். அதில் 23 ,62 ,255 பேர் ஆண்களும், 10,48 ,945 பேர் பெண்களும் உள்ளனர்.
இதையடுத்து ஆண்கள் எண்ணிக்கையில் 69.25 சதவீதமும், பெண்கள் எண்ணிக்கையில் 30.75 சதவீதம் உள்ளனர். இந்நிலையில் 225 ஆண்களுக்கு 100 பெண்கள் என்ற விகிதத்தில் மக்கள் வசிக்கின்றனர். குறிப்பாக நாட்டின் பெரும்பாலானோர் வெளிநாட்டு தொழிலாளர்களாக இருப்பதால் ஆண்களின் சதவிகிதம் அதிகமாக உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.