சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியை ,முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் ட்விட்டரில் பாராட்டியுள்ளார் .
14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் சென்னை அணி வீரர்களுக்கு, முதலில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதன்பிறகு ஒரு சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்தது.இந்தநிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி , சென்னை அணி இடம்பெற்றுள்ள வீரர்கள் அவர்களுடைய வீட்டிற்கு பத்திரமாக சென்ற பின்பு தான், நான் கடைசி ஆளாக வீடு திரும்புவேன் என்று கூறியிருந்தார்.
இதனால் இவருடைய முடிவிற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதைப்பற்றி பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான வாசிம் ஜாபர் ,தோனியை பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அணியின் வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டோனி எடுத்த முடிவிற்கு பாராட்டியுள்ளார். அதோடு ‘கடைசி வரை அங்கேயே தங்கி இருந்து, வேலையை முடிப்பதுதான் தோனியின் குணம்’ என்று அவரைப் பாராட்டி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
Staying there till the end and getting the job done, just @msdhoni things👏 #ipl2021 pic.twitter.com/7hJUCLCId0
— Wasim Jaffer (@WasimJaffer14) May 6, 2021