அரிதான பிரெஞ்ச் வெள்ளி நாணயம் பல மில்லியன் பிராங்குகள் தொகைக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் Solothurn என்ற நகரில் அரிதான பிரெஞ்ச் வெள்ளி நாணயம் ஒன்று ஏலத்தில் விடப்பட்டது. இந்த நாணயம் 340,000 பிராங்குகள் தொகைக்கு ஏலத்தில் பெறப்பட்டது . இந்த La Calaisienne என்ற அரிதான பிரெஞ்ச் வெள்ளி நாணயம் சுமார் 50,000 பிராங்குகள் வரை விலை போகலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த வெள்ளி நாணயம் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் விலைபோனது மகிழ்ச்சிதான் என்று விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த La Calaisienne என்ற பிரெஞ்ச் வெள்ளி நாணயம் உலகிலேயே 3 எண்ணிக்கையில் மட்டும்தான் இருப்பதாக தெரிவிக்கின்றனர். தற்போது ஏலத்தில் விடப்பட்டது தவிர மீதமுள்ள 2 நாணயங்கள் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது. இந்த வகை நாணயங்களை ஏலத்தில் விற்பனை செய்வது மிகவும் அரிதானது என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த La Calaisienne நாணயம் இறுதியாக கடந்த 1921-ம் ஆண்டு விற்பனைக்கு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் 1455 ம்ஆண்டுகளின் புழக்கத்தில் இருந்த இந்த நாணயம் 100 ஆண்டுகால போரில் பிரெஞ்ச் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.