Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இங்கு நடைபாதை பூங்கா…. பணிகளை விரைவாக முடிக்கனும்…. கலெக்டரின் உத்தரவு….!!

 நடைபாதை பூங்கா ஏற்படுத்துவதற்கு பூர்வாங்கப் பணிகளை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஏமப்பேர் குளபகுதியில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குளத்தில் அமைந்துள்ள செடிகளை அகற்றி குளத்திற்கு நீர் வரத்து மற்றும் வெளியேற்று வாய்க்கால்களை விரைவாக தூர்வாரவும், குளத்தின் கரை பகுதியில் நடைபாதையுடன் சேர்த்து பூங்கா அமைப்பதற்கு முதற்கட்ட பூர்வாங்க பணிகளை தொடங்குவதற்கு தேவையான திட்ட அறிக்கையை தயார் செய்து பணிகளை விரைவாக முடிப்பதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து நகராட்சி மயான பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்  உட்புறத்தில் பூச்செடிகள் நட்டு பாதுகாக்கவும், வெளிப்புற சிறு சாலையோர பூங்காக்கள் அமைத்து பராமரிக்கவும், நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பின் துருகம் சாலை பகுதியில் நுண் உரம் உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்படும் நூண் உரத்தை விவசாயத்துக்கு பயன்படுத்த தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுப்பதற்கு அதிகாரிகளிடம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் 14-ஆவது வார்டு உட்பட்ட ஏமப்பேர் தெரு, 12-வது வார்டு உட்பட்ட அண்ணாநகர் தெருவில் வாய்க்கால் தூர்வாரும் பணி மற்றும் தூய்மை பணியையும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இதனைதொடர்ந்து நகராட்சி பகுதிகளில் உள்ள காலி மனையில் உபயோகமில்லாத டயர், பிளாஸ்டிக் கழிவுகளில் மழைநீர் தேங்காமல் பார்க்கவும், செடிகொடிகளை அகற்றி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு வீட்டின் உரிமையாளர்களுக்கு நகராட்சி சார்பாக உரிய அறிவிப்பு வழங்கப்பட்டது. அதன்பின் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்காமல் பொதுமக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கழிவு நீர் வாய்க்காலில் போடாமல் குப்பை சேகரிக்க வரும் பணியாளரிடம் வழங்க வேண்டும் என்றும் கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் குமரன், பொறியாளர் பாரதி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பணியாளர்கள் ஆகியோர் அவருடன் இருந்தனர்.

Categories

Tech |