நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் புகழ்ந்து பேசியுள்ளார் .
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது .இதில் டி20 தொடரில் இந்திய அணியில் சீனியர் வீரர்களான விராட் கோலி ,முகமது ஷமி , பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் இடம் பிடித்த இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்தார் .
இதனிடையே இந்திய டி20 அணியில் அவர் இடம் பெற்றிருக்கும் நிலையில் அவரது திறமையை குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் புகழ்ந்துள்ளார் .இதுகுறித்து அவர் கூறும்போது,” ருதுராஜ் கெய்க்வாட் மிகச்சிறந்த திறமைசாலி .மேலும் அவர் இந்திய அணிக்காக மூன்று விதமான போட்டியிலும் விரைவில் விளையாடுவார் . அவர் நிறைய நிறைய ஷாட்டுகளை கைவசம் வைத்திருக்கிறார். அவரது ஷாட் செலக்ஷன் நன்றாக உள்ளது . ருதுராஜ் கெய்க்வாடின் பேட்டிங் டெக்னிக் எந்த விதமான நெருக்கடியையும் நிதானத்துடன்அதனை கையாளும் திறன் ஆகியவை பிரமிக்க வைக்கின்றது .அவர் தன்னை ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராக எப்படி வளர்த்துக் கொள்ள போகிறார் என்பதை பார்க்க சிறப்பாக இருக்கும் “இவ்வாறு அவர் கூறியுள்ளார்.