Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த செடியா வளர்க்க…. வசமா சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்த்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பாக்கம் கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி பரதராமி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன், திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு ஏட்டு ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் பாக்கம் கிராமத்தில் உள்ள வீட்டில் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு வீட்டில் இருந்த வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் பாபு என்பவரின் மகன் அபி என்ற அபிநந்தன் என்பதும் வீட்டின் பின்பகுதியில் உள்ள இடத்தில் செடிகளுடன் சேர்த்து கஞ்சா செடி வளர்த்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் வீட்டை காவல்துறையினர் சோதனை செய்ததில் ஒரு கைத்துப்பாக்கி, 2 மோட்டார் சைக்கிள்கள் உதிரிபாகங்கள் பிரிக்கப்பட்ட நிலையிலும் மற்றும் 3 உயர்ரக நாய்க்குட்டிகள் இருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அபிநந்தனிடம் தீவிர விசாரணை நடத்திய போது உயர்ரக நாய்களை ஒருவருடைய வீட்டில் இருந்து திருடி வந்தது என தெரியவந்துள்ளது. அதன்பின் அந்த நாய் குட்டிகளை உரிய உரிமையாளர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்

இதனைதொடர்ந்து கஞ்சா செடி, துப்பாக்கி போன்ற பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து அபிநந்தனை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது குடியாத்தம் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிலர் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்து அபிநந்தனிடம் கொடுத்து உதிரிபாகங்களை பிரிப்பதாக கூறப்படுகிறது. அதன்பின் அபிநந்தனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி பறவைகளை வேட்டையாடும் ஏர்கன் துப்பாக்கி ஆகும். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அபிநந்தனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |