ஐபிஎல் போட்டியில் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு , கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அதிரடி வீரர்களுக்கே பயத்தை காட்டினார். இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக், இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒரு இளம் வீரரை பற்றி, யாரும் அதிகம் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார். இவர் டெல்லி அணியின் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளரான அவேஷ் கான் யாரும் அதிகம் பேசவில்லை, என்று கூறியுள்ளார்.
அவர் அமைதியாக ஒவ்வொரு போட்டியிலும் , இரண்டு முதல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அக்ஷர் பட்டேலுக்கு, அடுத்த இடத்தில் உள்ளார், என்று சேவாக் தெரிவித்தார். இதுபற்றி ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பொம்மி ம்பாங்வா கருத்து தெரிவித்துள்ளார். அவேஷ் கான் பற்றி யாரும் அதிகமாக பேசவில்லை என்றும், ஆனால் அவர் போட்டியின் தொடக்கத்திலும் , மிடில் ஆர்டர் மற்றும் இறுதிக் கட்டத்திலும் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் என்று,அவரை பொம்மி ம்பாங்வா பாராட்டியுள்ளார். அவேஷ் கான் இந்த சீசனில் எம்எஸ் தோனி , பிரஸ்டோ, சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, நிக்கோலஸ் பூரன் போன்ற அதிரடி வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.