Categories
உலக செய்திகள்

இந்த தடுப்பூசி ரொம்பவே பாதுகாப்பா இருக்கும் …. பிரபல நாட்டு விஞ்ஞானிகள் விளக்கம் ….!!!

டெல்டா வகை கொரோனா வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் பாதுகாப்பாக இருக்கும் என்று ரஷ்ய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உலக நாடுகள் முழுவதும்கொரோனா  வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ்  உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த டெல்டா வகைக்கான வைரசுக்கு எதிரான  ஸ்புட்னிக்-வி தடுப்பூசி போன்ற ‘மெசேஞ்சர் ஆர்.என்.ஏ.’ தடுப்பூசிகள் பாதுகாப்பாக செயல்படும் என்று ரஷ்யாவின் அறிவியல் அகாடமியில் உறுப்பினரும், நோவாசிபிர்ஸ்க் மாகாண பல்கலைக்கழகத்தின் ஆய்வக தலைவருமான  செர்ஜி நெடேசோவ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் வருகின்ற தரவுகள் படி, இந்த டெல்டா வகை வைரசுக்கு எதிராக  ஸ்புட்னிக்-வி போன்ற மெசேஞ்சர் ஆர்.என்.ஏ. தடுப்பூசிகள் 90% பாதுகாப்பாக இருக்கும் என்பதை காட்டுகின்றது .

இதற்குமுன் உருவாகிய தடுப்பூசிகள் பாதுகாப்பாக இருப்பதால் அவற்றையும் பயன்படுத்தலாம் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து கமலேயா ஆராய்ச்சி மையத்தின் மக்கள்தொகை மாறுபாடு பொறிமுறைகள் ஆய்வுக் கூட்டத்தில் தலைவரான விளாடிமிர் குஷ்சின் கூறும்போது,  டெல்டா வகை கொரோனா வைரசால் ஏற்படுகின்ற கடுமையான நிகழ்வுகளுக்கு எதிராக இந்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசியானது 100 % பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்கின்றது” என்று அவர் கூறியுள்ளார் .

Categories

Tech |