Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்த தருணத்தை ஒருபோதும் மறக்கமாட்டேன் ‘ …. தோனியை புகழ்ந்து பேசிய உத்தப்பா ….!!!

கடந்த 2007 -ல் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை பவுல்-அவுட்முறையில் வீழ்த்தி வெற்றி பெற்றதை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா கூறியுள்ளார் .

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 14 வருடங்களுக்கு முன்  நடந்த  டி20 உலகக் கோப்பை தொடரில்  இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின .இதில் குரூப் சுற்றில் பாகிஸ்தான் அணியை              பவுல்-அவுட் முறையில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்றது இப்போட்டியின் முடிவில் இரு அணிகளும் 141  ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில்  முடிந்தது .இதனால் பவுல் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது .இதில் இந்திய அணியில் ஹர்பஜன் சிங் ,சேவாக் மற்றும் ராபின் உத்தப்பா பந்துவீசி ஸ்டம்புகளை தகர்த்தனர். இதுகுறித்து ராபின் உத்தப்பா கூறும்போது, “போட்டி சமனில் முடிந்தபோது அணியில்  பவுல் அவுட்டில் யாரை பந்து வீசுவது என்பது குறித்து விவாதித்தோம்.

அப்போது நான் கேப்டன் தோனியிடம் சென்று நான் பந்து வீசுகிறேன் என்று சொன்னதும் அவர் பதில் எதுவும் கூறாமல் நிச்சயமாக என்று கூறினார் .இதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் தோனியின் சிறப்பான தலைமைப் பண்பை  எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன். மேலும் அதுதான் இந்திய அணியின் கேப்டனாக தோனி விளையாடிய முதல் போட்டியாகும். இத்தருணத்தை  ஒருபோதும் மறக்க மாட்டேன் “என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Categories

Tech |