தன் மகள் மேகனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், என்று அவரது தந்தை தாமஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தாமஸ் மெர்க்கலின் மகளான மேகன் மெர்க்கல் இளவரசர் ஹரியை திருமணம் செய்து கொண்டபின், கடந்த 3 வருடங்களாக தாமஸ்க்கும் ,மேகனுக்கும் பேச்சுவார்த்தை இல்லை.இது குறித்து தாமஸ் மெர்க்கல் கூறியதாவது ,” தமக்கும் மகள் மேகனுக்கும் எவ்வாறு பிரிவு ஏற்பட்டது என்பது குறித்து குழம்பி போயிருக்கிறேன் . சில வருடங்களுக்கு முன் மேகன் மெர்க்கலுக்கு ஆண் குழந்தை பிறந்த போது நான் சந்திக்கவில்லை. இந்நிலையில் தற்போது பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த முறை கண்டிப்பாக என் பேத்தியை கொஞ்ச வேண்டும் என்று நினைக்கிறேன் .
மேலும் நான் செய்த தவறுக்கு நூறுமுறை மன்னிப்பு கேட்கிறேன். ஒருவேளை நான் மோசமான தவறு செய்ததற்காக தண்டிக்கப்பட்டிருந்தால் அது சரியான முடிவாக இருக்கும். ஆனால் நான் அப்படி செய்யவில்லை என்பதுதான் உண்மை “என்று கூறியுள்ளார்.ஆனால் தாமஸின் மகள் மேகன் ஓப்ரா வின்ஃப்ரே உடனான நிகழ்ச்சியில் , என் தந்தை எனக்கு துரோகமிழைத்துவிட்டார் என்றும் ,இந்த உறவு சமரசம் செய்து கொள்ளும் நிலையில் இல்லை என்றும் மேகன் குறிப்பிட்டிருந்தார். இந்த நேர்காணல் உலகெங்கும் பரவி கவனத்தை ஈர்த்தது .
இந்த குறித்து தாமஸ் மெர்க்கல் கூறியதாவது , “என் மகள் மேகன் தற்கொலை எண்ணத்தால் அவதிப்பட்டு இருந்தபோது, ஹரியால் போதுமான உதவியை செய்ய முடியவில்லை .மேலும் இந்த சம்பவம் தனக்கு கவலையை ஏற்படுத்தியதாகவும், மகள் மேகன் தம்மை எளிதாக நாடி இருக்கலாம் அல்லது எனது குடும்ப உறுப்பினர்கள் யாரையாவது தொடர்பு கொண்டு இருக்கலாம் . நாம் அனைவரும் தவறு செய்திருக்கிறோம், ஆனால் இளவரசர் ஹரியை போல நான் ஒருபோதும் தவறு செய்வதில்லை . ஆனால் தற்போது பேரப்பிள்ளைகள் இருவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் “, என்று அவர் தெரிவித்துள்ளார் .