தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க 15-ஆம் தேதி கடைசி நாளாகும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றது. இத்திட்டத்தின்கீழ் இந்த ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 58 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும் என்றும் தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட வருமானச்சான்று, தமிழ்ப்பணி ஆற்றியதற்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்று வருவதற்கான தகுதிநிலை சான்றிதழ் போன்றவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதில் தேர்வு செய்பவர்களுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை கொடுக்கப்படும். ஆகவே விருப்பம் இருப்பவர்கள் சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மண்டல தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் வருகின்ற 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.