Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த வயதில் கல்யாணமா…? இது ரொம்ப தப்பு…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

41 வயது வாலிபருக்கு 16 வயது மாணவியை திருமணம் செய்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒக்ணாபுரம் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் கழனிபாக்கம் கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய மாணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அங்கு இருக்கக்கூடிய பீம்நாத ஈஸ்வரர் கோவிலில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் சுப நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அறிந்த ஊர் நல அலுவலர் விஜயலட்சுமி பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருமணமான மண மக்களையும், இரு வீட்டாரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது 41 வயதுடைய வாலிபருக்கு 16 வயது மாணவியை திருமணம் செய்து வைத்ததற்காக மணமகளின் தந்தை மீதும், மணமகன் சுரேஷ் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவியை திருமணத்திற்கு கட்டாயப்படுத்திய அவரது உறவினர்களிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து மாணவியை காவல்துறையினர் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |