Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த வயதில் கல்யாணமா…. வசமா சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்திலுள்ள கே.வி.குப்பம் தாலுகா வடுகந்தாங்கல் பகுதியில் 40 வயதுடைய பெண் வசித்து வருகின்றார். இவருடைய கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனையடுத்து பெண் கருகம்புத்தூரை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பெண்ணின் 13 வயதுடைய மகளை ஞானசேகரின் அண்ணன் ஆட்டோ டிரைவரான லோகநாதன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து அந்த சிறுமியை கற்பமாக்கி பின் கலைப்பதற்காக அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் உடனடியாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி அதிகாரிகள் அங்கு சென்று சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து சமூக நலத்துறை அலுவலர்கள் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்குப்பதிவு செய்து போக்சோ மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஆட்டோ டிரைவர் லோகநாதனை கைது செய்தனர். அதன்பின் சிறுமியை லோகநாதனுக்கு திருமணம் செய்து கொடுத்த தாயாரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பிறகு சிறுமியை மீட்டு அரியூரில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Categories

Tech |