பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராஜாக்கமங்கலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜங்ஷனில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் பெருமாள் தலைமை தாங்கினார். இதனையடுத்து கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் குமரேசன் மற்றும் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.