தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதற்காக ஒரு பாடையை உருவாக்கி அதில் சமையல் எரிவாயு சிலிண்ர் மற்றும் மாட்டு வண்டியில் காரொன்று ஏற்றியும் வைத்திருந்தனர். இதனையடுத்து தேர் பிள்ளையார் கோவில் வீதியில் இருந்து சிலிண்டருக்கு கட்டப்பட்ட பாடையை கட்சியின் மகளிர் அணியினர் தங்கள் தோளில் சுமந்தபடி கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் வரை ஊர்வலமாக சென்றுள்ளனர். இந்த ஊர்வலத்துடன் காரை ஏற்றிய அந்த மாட்டு வண்டியை ஒருவர் ஓட்டிக்கொண்டு வந்தார். அதன்பின் ஊர்வலம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட எதிரில் முடிவடைந்தது.
இதனைதொடர்ந்து அங்கு மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் குமரன் தலைமையில், தலைவர் பாலமுருகன் வரவேற்று பேசினார். அதன்பின் மாநில தொழிற்சங்க தலைவர் பன்னீர்செல்வம் கண்டன உரை ஆற்றினார். அதன் பிறகு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மின்னல்தினேஷ், மாநில அமைப்புக் குழு நிர்வாகிகள் சசிகுமார், சேட்டு, மாவட்ட மாணவர் அணி செயலாளர் அலெக்ஸ்தீனா, துணைச் செயலாளர்கள் அக்பர் அலி, டேவிட், ஒன்றிய செயலாளர்கள் அய்யனார், பிரகாஷ், கிருஷ்ணமூர்த்தி, ஏழுமலை, சக்கரபாணி ,ஜெகதீசன், ஜீவா, வீரமணி மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டு பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அதன்பின் முடிவில் நகர செயலாளர் மோகன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.