Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஆக்சிஜன் வசதி இல்லை…. சொன்னதும் கொடுத்துட்டாங்க…. இந்திய மருத்துவ சங்கத்திற்கு நன்றி….!!

திருவாரூரில் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் 30 ஆக்சிஜன் சிலிண்டர்கள் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் தற்போது 90 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தலைமை மருத்துவர் சிவக்குமார் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் வசதி இல்லை என்று இந்திய மருத்துவர் சங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இந்திய மருத்துவ சங்கத்தின் மூத்த தலைவர் ராஜா மற்றும் திருத்துறைப்பூண்டி கிளை தலைவர் சுரேஷ்குமார் போன்றோர் தனியார் மருத்துவமனையில் இருக்கும் 30-க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அரசு மருத்துவமனைக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாரிமுத்து எம்.எல்.ஏ ஆக்சிஜன் சிலிண்டரை தலைமை மருத்துவரிடம் வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பாஸ்கர், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஆர். எஸ் பாண்டியன், விவசாய சங்க நகரச் செயலாளர் டி. பி சுந்தர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |