Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை இந்து நாடாக மாற்ற நாங்கள் யாரையும் கொலை செய்வோம்…. உறுதிமொழி எடுத்த பா.ஜ.க.வினர்….!!!!

உத்தரகாண்ட மாநிலமான ஹரித்வாரில் தர்ம சன்சத் என்ற இந்து அமைப்பு கடந்த 17-ஆம் தேதி முதல் 19 வரை 3 நாட்கள் ஒரு மாநாடை நடத்தியது. இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேச அமைச்சர் ராஜேஷ், பாஜக தலைவர் அஸ்வினி உபாத்யாயா உட்பட பல்வேறு பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனையடுத்து இறுதிநாளில் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், “இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்றுவோம். இதற்காக கொலையும் செய்வோம்” என்று உறுதி மொழி எடுத்து உள்ளனர்.

இந்த உறுதிமொழி தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதன்பின் பாஜக தலைவர்களின் முன்னிலையிலேயே சர்ச்சைக்குரிய அடிப்படையில் சாமியார்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டது குறித்து தர்ம சன்சத் அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்ககோரி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Categories

Tech |