இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயது 18 ஆகும். ஆனால் பெற்றோர் சம்மதத்துடன் 16 அல்லது 17 வயது பெண்களும் திருமணம் செய்து கொள்ளலாம்.ட்ரினிடாட் டொபாகோ:
கரீபிய தீவு நாடான ட்ரினிடாட் டொபாகோவில் ஆண்கள் மற்றும் பெண்களின் சட்டப்பூர்வமான திருமண வயது 18 ஆக இருக்கிறது. இங்கு இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களுக்கு தனி திருமண சட்டம் அமலில் இருக்கிறது. அந்த அடிப்படையில் இஸ்லாமிய பெண்கள் 12 வயதிலும், ஆண்கள் 16 வயதிலும் திருமணம் செய்து கொள்ளலாம். இதேபோன்று இந்து ஆண்கள் 18 வயது மற்றும் பெண்கள் 14 வயதில் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் ஒரு சீராக இல்லாமல் பல்வேறு மாகாணங்களில் வெவ்வேறு விதத்தில் பெண்களின் திருமண வயது நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதாவது சில மாகாணங்களில் குறைவாக மற்றும் சில மாகாணங்களில் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. massachusetts மாகாணத்தில் நீதிமன்ற அனுமதியுடன் 12 வயதில் பெண்கள் திருமணம் செய்துகொள்ள வாய்ப்புள்ளது.
சீனா:
சீன நாட்டில் ஆண்களின் சட்டப்பூர்வமான திருமண வயது 22 ஆகவும், பெண்களின் திருமண வயது 20 ஆகவும் இருக்கிறது. அங்கு திருமண வயதை குறைப்பதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகிறது. எனினும் பல்வேறு காரணிகளால் அவை விவாதத்துக்கு உரியவையாக மாறியிருக்கின்றன.
நைகர்:
உலகளவில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெறும் நாடாக நைகர் விளங்குகிறது. இங்கு 18 வயதுக்கு முன்பே 76% பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 28 சதவீதம் பேர் திருமணம் செய்து கொள்கின்றனர். அங்குள்ள பொருளாதார மற்றும் குழப்பமான சூழல்களால் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.