Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் யாரிடமும் இல்லாத காரை வாங்கிய தொழில் அதிபர்…. எவ்வளவு கோடி தெரியுமா?….!!!!

விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களின் வரிசையில் முன்னணியில் உள்ள மெக்லாரன் காரை ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் வாங்கி இருக்கிறார்.

விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களின் வரிசையில் முன்னணியில் உள்ள மெக்லாரன் காரை, ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் வாங்கி இருக்கிறார். அதாவது, தெலங்கானா ஹைதராபாத்தைச் சேர்ந்த நசீர்கான் என்ற அந்த தொழில் அதிபர் மெக்லாரன் நிறுவனத்தின் 765 எல்.டி ஸ்பைடர் என்ற ஸ்போர்ட்ஸ் காரை வாங்கி உள்ளார்.

இந்த காரின் மதிப்பு ரூ.12 கோடி ஆகும். நம் நாட்டில் இந்த காரை வாங்கிய முதல்நபர் இவரே ஆகும். மேலும் ரோல்ஸ் ரோய்ஸ், மெர்ஸிடஸ் பென்ஸ், ஃபெராரி, ஃபோர்ட் மஸ்டாங் உட்பட பல விலையுயர்ந்த கார்களை இவர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |