இண்டிகோ விமான போக்குவரத்து நிறுவனத்திற்கு இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 2844.3 கோடி இழப்பு என தெரிவித்துள்ள.
இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர்க்குளோப் எவியேஷன் விமான இயக்கத்தின் மூலமான வருவாய் 91.9 சதவிகிதம் குறைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவல் அச்சம் காரணமாக விமான போக்குவரத்தையும் அரசு முற்றிலும் முடங்கியதை தொடர்ந்து பெரும்பாலான விமான போக்குவரத்து நிறுவனங்கள் வருவாய் இன்றி திணறிக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இண்டிகோ நிறுவனம் 1203.1 கோடி லாபம் ஈட்டி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.