Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய(25.04.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

25-04-2020, சித்திரை 12, சனிக்கிழமை

இராகு காலம் – காலை 09.00-10.30

எம கண்டம் மதியம் 01.30-03.00

குளிகன் காலை 06.00-07.30

இன்றைய ராசிப்பலன் –  25.04.2020

மேஷம்

உங்களுக்கு இன்று பொருளாதாரத்தின் நிலை சுமாராகவே இருக்கும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உண்டு. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வரும்.

ரிஷபம்

இல்லத்தில் இன்று மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனைத் தரும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரம் தொடர்பாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

மிதுனம்

பிள்ளைகளால் இன்று மன உளைச்சல்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். செலவுகள். பெரிய மனிதர்களின் நச்சு தொழிலின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

கடகம்

இன்று எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழிலில்புதிய நபர் அறிமுகம் உண்டாகும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.

சிம்மம்

இன்று உடலாரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு. திருமண சுப முயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி

வீட்டில் இன்று சுபச்செலவுகள் ஏற்படும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் பெறுவீர்கள்.

துலாம்

இன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் ஆகும். உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுகள் தேவை. வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கலில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் மன மகிழ்ச்சி தரும் நற்செய்திகள் வீடு வந்து சேரும். தொழிலின் வளர்ச்சிக்காக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் நற்பலன்களை கொடுக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஒருசிலர் பொன் பொருள் வாங்கி மகிழ்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

தனுசு

இன்று அனைத்து செயல்களையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பிள்ளைகள் வழியில் நற் செய்திகள் வந்து சேரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகம் தொடர்பாக வெளிவட்டார நட்பு கிடைக்கும்.

மகரம்

பிள்ளைகளால் என்று வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். கடன் பிரச்சனை குறையும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை சக ஊழியர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.

கும்பம்

குடும்பத்தில் இன்று வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஒற்றுமை குறையும். வியாபாரத்தின் பிரச்சினைகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் நன்மை உண்டு.

மீனம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். வேலை தொடர்பாக வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். சுப காரியங்கள் அனைத்தும் கைகூடும்.

Categories

Tech |