சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று காரணமாக உயர்நிலை பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் நடத்தப்படவிருந்த நுழைவு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காய் நகரில் சமீப நாட்களாக கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்திருக்கிறது. எனவே, ஐந்து வாரங்களாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில், ஷாங்காய் அரசு, உயர்நிலை பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் நடத்தப்படவிருந்த நுழைவு தேர்வுகளை தள்ளி வைத்திருக்கிறது.
அதன்படி, கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வுகள் வரும் ஜூலை மாதம் 7ஆம் தேதியிலிருந்து, 9 ஆம் தேதி வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மேல்நிலைப் பள்ளிகளுக்கான நுழைவுத் தேர்வு, வரும் ஜூலை மாதம் 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடக்கவிருக்கிறது.