Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தொழில்நுட்ப வளாகத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக புத்தாக்க கண்டுபிடிப்பு கண்காட்சி, மாணவர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் த.மோ அன்பரசன் கலந்துகொண்டு விழாவினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அதன் பிறகு புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களுக்காக ரூபாய் 59 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டது. இந்த விழாவுக்கு பிறகு அமைச்சர் த.மோ அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தொழில் முனைவோர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர் களுக்கு ரூபாய் 59 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தொழில் முனைவோர்களாக, புதிய கண்டுபிடிப்பாளர்களாக வர பல்வேறு விதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வேண்டும் என்பதற்காக திமுக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இனி பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. இதற்காக 5 இடங்களில் பயிற்சி மையம் அமைப்பதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் புதிய தொழில் முனைவோர்களாக, கண்டுபிடிப்பாளர்களாக உருவாகுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறினார்.

Categories

Tech |