தமிழகத்தில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்புக்கு காரணம் கடந்த காலங்களை விட இந்த சீசனில் ஏராளமான சண்டை நிகழ்வுகளும், சுவாரசியமான நிகழ்வுகளும் அதிகம் நடப்பதே. அதேபோல், இந்த சீசனில் போட்டியாளர்களுக்கு அளிக்கப்படும் டாஸ்க்குகளும் சற்று வித்தியாசமானதாக இருக்கிறது.
இந்நிலையில் வழக்கம்போல், ஞாயிற்றுக்கிழமையான இன்று இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து எந்த பிரபலம் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருக்கும். இதுவரை இந்த சீசனில் ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரியில் சென்ற சுசித்ரா குறைவான வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பகல் நிலவு சீரியலில் ஷிவானியுடன் நடித்த அசீம் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை அசீம் உள்ளே நுழைந்தால், இதுவரை பெருமளவு பங்கேற்காத ஷிவானியின் போட்டியில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.