மாநில விதை பண்ணையில் பிளாஸ்டிக் பைகளை ஒட்டுமொத்தமாக எரித்ததால் அந்த இடமே கரும் புகை சூழ்ந்து காணப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டியில் மாநில விதை பண்ணை ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த பண்ணையில் குளிர்பதன கிடங்கு அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக கிடங்கு தளவாடங்கள் மற்றும் குளிர்பதனப் பெட்டி கொண்டு வரப் பிளாஸ்டிக் பைகள் மற்றும் தர்மாகோல் போன்றவற்றை வளாகத்திற்குள் குவித்து வைத்துள்ளனர்.
அதன் பின் அந்த குப்பை குவியலுக்கு தீ வைத்துள்ளனர். இதனால் தீ பற்றி 50 அடி உயரத்துக்கும் மேலாக எரிந்து அந்த இடமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு உள்ளனர்.