கேப்டன் தோனியின் நம்பிக்கையை இளம் வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் உடைப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற 8வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 106 ரன்களை குவித்தது. இதன்பிறகு பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில், 107 ரன்களை குவித்து, சுலபமாக வெற்றி பெற்றது சுலபமாக வெற்றி பெற்றது. கடந்த சீசனை போன்று ,நடப்பு தொடரிலும் நடந்து விடக்கூடாது என்பதற்காக, தோனி மிகவும் கவனமாக இருந்தார். இதனால் நேற்றைய போட்டியில் தொடக்க வீரர்களாக டூப்ளசிஸ் – உத்தப்பா களமிறங்குவார்கள் ,என்று நினைத்தபோது, கேப்டன் தோனி இளம் வீரரான ருத்ராஜ் கெயிக்வாட்-க்கு வாய்ப்புக் கொடுத்தார்.
ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாத கெய்க்வாட், 8 பந்துகளில் 5 ரன்களை எடுத்து அவுட்டானார். இதனால் தொடக்கத்தில் சிஎஸ்கே அணியில் சற்று பதட்டம் காணப்பட்டது. இதனால் தொடக்கத்திலேயே கெய்க்வாட் அவுட்டாகி வெளியானதால், தோனியின் நம்பிக்கையை உடைக்கிறார் ,என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ,தொடக்கத்தில் சொதப்பிய கெய்க்வாட் , அடுத்த நடந்த 3 போட்டிகளில் ,சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் கடந்த சீசனில் போலவே நடப்பு தொடரிலும் தோனி அவருக்கு வாய்ப்பு தருவாரா ,என்ற கேள்வியும் எழுந்துள்ளது.