வீடு தீ பிடித்து எரிந்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கிழக்கு பஞ்சாப் மாகாணம் முசாபர்கார் மாவட்டத்தில் உள்ள ஒரு வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது அந்த வீட்டில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 7 பேர் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இந்த தீ விபத்தானது இரவு வேளையில் அனைவரும் உறங்கியபோது நடந்ததால் ஒருவர் கூட உயிர் தப்பிக்க வில்லை. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.