Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எப்படி நடந்துச்சுனே தெரியல…. மளமளவென வந்த புகை…. திருப்பத்தூரில் பராபரப்பு….!!

சுற்றுலாவிற்கு சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக இருக்கின்றது. இந்நிலையில் வாணியம்பாடி சலாமாபாத் பகுதியை சேர்ந்த நயீம் அகமது என்பவர் தனது அம்மா, மனைவி, பிள்ளைகள் உட்பட 7 பேர் ஏலகிரி மலையை சுற்றி பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளனர். இந்நிலையில் 9-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் கார் சென்று கொண்டிருக்கும் போது என்ஜின் பகுதியில் இருந்து மளமளவென புகை வெளியானது. இதனை கண்டதும் நயீம் அகமது காரை நிறுத்திவிட்டு உள்ளே இருந்த அனைவரும் அடித்துப் பிடித்து வெளியே இறங்கினர். இதனையடுத்து என்ஜின் பகுதியில் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்து நாசமானது.

இதுகுறித்து தகவலறிந்த ஏலகிரிமலை காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் நெடுஞ்சாலைத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அதன்பின் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் ஏற்பட்ட தீயை சுமார் 1 மணிநேரம் போராட்டத்திற்கு பின் அணைத்தனர். ஆனாலும் கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இந்த விபத்தினால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் எரிந்து அந்த காரை சாலையில் இருந்து தீயணைப்பு துறையினர் அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்து  வழக்கம்போல் இயக்கப்பட்டது.

Categories

Tech |