சிக்கரி ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ரெங்கநாதபுரம் பகுதியில் பிரதீப் குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தன் மான சிக்கரி ஆலை இந்நகர் ரோசல்பட்டி சாலையில் இருக்கின்றது. இந்த ஆலையில் அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென ஆலயம் முழுவதும் பரவியதால் உடனடியாக விருதுநகர், அருப்புகொட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து மேலும் 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது.
இந்த ஆலையில் சிக்கரி கிழங்கு மற்றும் பவுடர் இருப்பில் தீ மளமளவென பரவியதனால் தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் திணறி வந்தனர். இந்த பணியில் கோட்ட தீயணைப்பு அதிகாரி கணேசன், உதவி அதிகாரி மணிகண்டன், தீயணைப்பு நிலைய அதிகாரி கண்ணன் போன்றோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்கு கடும் முயற்சி மேற்கொண்டனர். அதன் பிறகு சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது.
இதனால் ஆலையில் இருந்த பொருட்கள் பெருமளவு சேதம் ஏற்பட்டது. அதே நேரத்தில் ஆலை அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சியால் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இவ்வாறு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் சேதமடைந்துள்ள பொருட்களின் மதிப்பு 1 கோடி ரூபாய் இருக்கும் என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து பாண்டியன் நகர் காவலதுறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.