Categories
மாநில செய்திகள்

இப்படி ஒரு பயமா?… வித்தியாசமான மாஸ்க் உடன் வந்த எம்பி… நாடாளுமன்றமே திரும்பி பார்த்தது…!!!

தமிழக மாநில அவை கூட்டத்தில் எம்பி நரேந்திர ஜாதவ் நாடாளுமன்றத்திற்கு ஏர் பில்டர் மாஸ்க் அணிந்து வந்துள்ளார்.

தமிழக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரை  இரு அமர்வுகளாக நடத்த முடிவெடுத்தனர்.முதல்   பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ஆம் தேதி குடியரசுத் தலைவர் முன்னிலையில் தொடங்கப்பட்டது. இந்த முதல் கூட்டத்தொடர் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடைபெறும் என்றனர் . மேலும் இரண்டாவது கூட்டத் தொடர் மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். பிப்ரவரி 1 ஆம் தேதி 2021 -2022 ஆம் ஆண்டிற்கான  பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் தாக்கல் செய்துள்ளார்.

தற்போது நேற்று இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியது. கொரோனா விதிமுறைகளின்படி மாநிலங்களவை கூட்டம் காலை நேர அமர்வுகளுடனும் மக்களவை மாலை நேரத்திலும் திட்டமிட்டபடி நடைபெற உள்ளது. மேலும்  கொரோனா பாதுகாப்பு  அடிப்படையில் கூட்டத்திற்கு வந்த எம்.பிக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளிகளை பின்பற்றியும் பங்கேற்றிருந்தனர்.

அப்போது நரேந்திர யாதவ் அணிந்து வந்த  முககவசம் வித்யாசமாக இருந்தது. இது சிறந்த அம்சங்கள் பொருந்திய உயர் திறன் கொண்ட ஏர் பில்டர் மாஸ்க்என்று கூறினார் . இதில் 99.7 சதவீத  அளவிற்கு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் திறன் கொண்டுள்ளதாகவும் வாய் மற்றும் மூக்கு வழியாக வைரஸ்கள் உள்ளே செல்வதை தடுக்கும் என்று எம் .பி நரேந்திர யாதவ் தெரிவித்தார்.

Categories

Tech |