Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இப்படிதா நடந்திருக்கும்…. திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. வேலூரில் பரபரப்பு….!!

அகர்பத்தி தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி குமரப்பநகரில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகில் அகர்பத்தி தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகின்றார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக கம்பெனி அடைக்கப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் கடந்த வாரம் அகர்பத்தி உற்பத்தி தொடங்கியது. இதனையடுத்து வழக்கம்போல் பணி முடிந்தபின் தொழிலாளர்கள் கம்பெனியை அடைத்து விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் அகர்பத்தி கம்பெனியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு இருந்த பொருள்கள் மளமளவென எரிந்தது.

இதனால் அங்கிருந்து கரும்புகை வெளியேறியதை கண்டு அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காட்பாடி நிலைய அலுவலர் முருகேசன் தலைமையில், தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த அகர்பத்தி தயாரிக்க பயன்படும் குச்சிகள், மாவு மூட்டை என 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. எனவே மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு துறை வீரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |